இலங்கை Subscribe to இலங்கை
தடுப்பில் உள்ள புலிகளின் பெயர்களை வெளியிட தயார்; ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி தெரிவிப்பு
சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக 3 ஆயிரத்து 200 முறைப்பாடுகளை அவர்களுடைய உறவினர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விவரங்களை வெளியிடத் தயார் என ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
றோ அதிகாரி நேற்று யாழில் ரகசியப்பேச்சு; பலாலி உட்பட பல இடங்களுக்கும் அவர் நேரில் பயணம்
இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” வின் உயரதிகாரி ஒருவர் நேற்று யாழ். மாவட்ட படைத் தளபதியை பலாலியில் சந்தித்து ரகசியப்பேச்சு நடத்தியுள்ளார்.
அதிகார வெறி பிடித்த ராஜபக்ஷ ரெஜிமன்டை இல்லாதொழிக்க மக்களின் ஆதரவு தேவை! – ரணில்
அதிகார வெறி பிடித்த ராஜபக்ஷ ரெஜிமன்டை இல்லாதொழித்து மக்களிடம் அதிகாரங்களை மீளளிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெயிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனைக்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்கி புதிய இலங்கையை உருவாக்க முன்வர வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவரும்… Read more
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் கருத்துரைக்க சம்மந்தனுக்கு அனுமதி- உயர் நீதிமன்றம்
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுக்குறித்து கருத்துரைக்க பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜலத் ஜயவர்த்தன காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார்.
லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
ஹோமாகம மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்குவின் காரை கடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு – இருவர் காயம்
கெப்பற்றிபொலவில் வைத்து பிக்குவின் காரை கடத்திக் கொண்டு சென்ற போது பொலிஸ் காவலரணில் நிறுத்தாது சென்றமையால் கார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்திற்கு என்ன நடந்தது? -இரா.சம்மந்தன்
பாராளுமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்ட குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு என்ன நடந்தது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்படுவதை கண்டித்தும் இன்று காலை மட்டக்களப்பு, பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது.
முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ தப்பிய மீனவர்
முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது.





