இலங்கை Subscribe to இலங்கை
சுமந்திரனின் கருத்தை மறுத்த! மாவை ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு காணமுடியாதாம்
‘ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தை ஒழிப்பது இந்திய – இலங்கை ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயல்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்
இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பிரகாரமே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே இதனை ஒழிப்பதென்பது இரு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயற்பாடாகும் என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புலிச் சந்தேக நபர்கள் 10 பேர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் விடுதலை!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளனர்.
காணி சுவீகரிப்பு தொடர்பான 2184 ரிட் மனுக்கள் விசாரணைக்கு- மேன் முறையீட்டு நீதிமன்றம்
யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ளமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2184 ரிட் மனுக்கள் மீதான விசாரணையை யூலை மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு- கொழும்பு நகர சுகாதார வைத்திய அதிகாரி
2012 ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதங்களுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கும் இடையில் ஒப்பிடுகையில், கொழும்பில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு நகர சுகாதார வைத்திய அதிகார் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா மேலும் உதவி- கையொப்பமிட்டார் ஜனாதிபதி
தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வெடிவைத்தகல்லு தமிழ் விவசாயிகளின் நிலத்திலும் சிங்களவர் அத்துமீறல்- சிவசக்தி ஆனந்தன்
நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல்லு பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான கூளாமுறிப்பிலுள்ள அறுதி உறுதி மற்றும் எல். டீ.ஓ பத்திரங்களுடனான வயல் காணிகள்,
நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மகிந்தவுக்கு ஒபாமாவை விட வசதி வாய்ப்புக்கள்- ரணில்
இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பில் மக்கள் கருத்து அறிவதற்கு என இணையத்தளம் ஒன்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று (30ம் திகதி) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்திய இராணுவத்தின் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் நாயகம் வன்னி விஜயம்! – படங்கள் இணைப்பு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர், நேற்று வியாழக்கிழமை வன்னி படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.
லண்டனில் இருந்து வற்றாப்பளைக்கு நிவர்த்தி கடன் செய்ய வந்தவர் ரி.ஜ.டியினரால் கைது
லண்டனில் இருந்து தனது குடும்பத்துடன் தனது ஊரான வற்றாப்பளைக்கு நிவர்த்தி கடன் செய்ய வந்தவர் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.





