லண்டனில் இருந்து வற்றாப்பளைக்கு நிவர்த்தி கடன் செய்ய வந்தவர் ரி.ஜ.டியினரால் கைது

arrest
லண்டனில் இருந்து தனது குடும்பத்துடன் தனது ஊரான வற்றாப்பளைக்கு நிவர்த்தி கடன் செய்ய வந்தவர் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
லண்டனில் இருந்து தனது ஊர் ஆலயமான வற்றாப்பளைக்கு தனது நான்கு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வந்த மயில்வாகனம் கணேசரூபன் (வயது 39) என்பவரை நேற்று மாலை வற்றாப்பளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்று(30.5) அவரது மனைவி கணேசரூபன் சுகந்தி அவரைப் பார்பதற்காக வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சென்ற போது அவரை மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் அவருடைய கடவுச் சீட்டை தருமாறு கோரியுள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,