சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்திற்கு என்ன நடந்தது? -இரா.சம்மந்தன்

Rajavarothayam Sambanthan
பாராளுமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்ட குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு என்ன நடந்தது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த சட்டமூலத்தின் பிரதியும் ஹன்சாட் பிரதிகளும் என்னிடம் உள்ளன என்று தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இது தொடர்பிலான விவாதம் யூன் 19 வரையிலும் நடைபெற்றது என்று தெரிவித்துள்ளதுடன் அந்த சட்டமூலத்தை அரசாங்கம் கைவிட்டுவிட்டதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் கொலைச்செய்யப்பட்டமை, மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலைச்செய்யப்பட்டமை போன்ற மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் தொழிற்பாட்டை அவதானிக்கவென அரசாங்கம் நியமித்த சர்வதேச சுதந்திர முக்கியஸ்தர்கள் குழுவின் அழுத்தம் காரணமாகவே இந்த சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், இலங்கை அரசாங்கத்தின் பராமுகம் மற்றும் அசமந்த போக்கினால் விசனமடைந்த இந்த குழு நாட்டைவிட்டே வெளியேறிவிட்டது. அந்த ஆணைக்குழுவிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் என்ன? நடந்தது என்றும் அவர் கேள்யெழுப்பியுள்ளார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,