தடுப்பில் உள்ள புலிகளின் பெயர்களை வெளியிட தயார்; ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி தெரிவிப்பு

ravinatha-aryasinha
சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக 3 ஆயிரத்து 200 முறைப்பாடுகளை அவர்களுடைய உறவினர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விவரங்களை வெளியிடத் தயார் என ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக 3ஆயிரத்து 200 முறைப்பாடுகளை அவர்களுடைய உறவினர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஆரியசிங்க கூறினார். முறையாகப் பதிவு செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 101 முறைப்பாடுகள் தொடர்பாகத் தாம் இதுவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், விசாரணை முடிவடைந்து தடுப்புக் காவலிலுள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் புலிகள் இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களின் விவரங்களை வெளியிடத்தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: ,