Tag Archives: புலி

இலங்கையின் இரண்டு வங்கிகளில் புலிகளின் 86 மில்லியன் ரூபாவை ரெஜி வைப்பிலிட்டுள்ளார் – அரசாங்கம்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.

யுத்தத்தின் பின்னரும் இனவாதம் தலைகால் தெரியாமல் ஆடுகிறது! அரசே காரணம் என சபடுகிறார்- பாஸ்கரா
விடுதலைப்புலிகளும், அரச படைகளும் யுத்தத்தின் போது இருந்த சிங்கள தமிழ் இனவாதம் யுத்தம் முடிந்து சமாதானமான இந்த தருணத்திலும் தலைகால் தெரியாமல் தலை விரித்தாடுகின்றது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.

கொழும்பில் புலிகளின் குண்டுகள்: தேடும் பணி தொடங்கியது
போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

1.2 பில்லியன் பெறுமதியுடைய புலிகளின் சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல்வெளியிட்டுள்ளது.

புலிச் சந்தேக நபர்கள் 10 பேர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் விடுதலை!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளனர்.

தடுப்பில் உள்ள புலிகளின் பெயர்களை வெளியிட தயார்; ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி தெரிவிப்பு
சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக 3 ஆயிரத்து 200 முறைப்பாடுகளை அவர்களுடைய உறவினர்களிடம் இருந்து பெற்றுள்ளனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விவரங்களை வெளியிடத் தயார் என ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ; பாதுகாப்பு செயலர்
இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுவிஸில் புலிகளின் தாக்குதல் அணி; திவயின பரபரப்புத் தகவல்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கச் செல்லும் இலங்கை அரசியல்வாதிகளைக் கொல்லும் திட்டத்தோடு புலிகளின் தாக்குதல் பிரிவான “ஹிட் ஸ்கொட்’ அணி காத்திருக்கிறது என்ற ரகசியத் தகவல் சுவிஸ் பொட்போல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தியை கொழும்பில் இருந்து வெளியாகும் “திவயின’… Read more

பிறேமதாச புலிகளைப் பிளவுபடுத்தவே ஆயுதங்களைக் கொடுத்தார்; அவரது மகன் சஜித் பிறேமதாச தெரிவிப்பு
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

ராவயவின் பார்வையில் வடக்கின் தேர்தல்கள்
வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் அது முக்கிய விடயமாகும்.