பிறேமதாச புலிகளைப் பிளவுபடுத்தவே ஆயுதங்களைக் கொடுத்தார்; அவரது மகன் சஜித் பிறேமதாச தெரிவிப்பு

sajith
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக எனது தந்தை மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்த அந்த ஆயுதங்கள் உதவும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார்.

மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார் என அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,