
முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது.
மீன்பிடிப்பதற்காக சென்ற 65 வயதான மீனவர் ஒருவரே முதலையின் வாயில் சிக்கிக்கொண்டுள்ளார். அவருடைய கால்களை முதலை கௌவிக்கொண்டது.
உடனடியாக கைகளை முதலையின் வயிற்றுக்கு கீழே கொண்டுபோன அவர் முதலையின் வயிற்றில் கிச்சுகிச்சுமூட்டியுள்ளார்.
கூச்சமடைந்த முதலை வாயை திறந்தவுடன் அதன்பிடியிலிருந்து தான் தப்பித்து கொண்டதாகவும் இந்த முறைமை தொடர்பில் தான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததாகவும் அந்த மீனவர் தெரிவித்துள்ளார்.
முதலையிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மந்திரம் செய்யப்பட்ட கற்களை அந்த களப்பிற்குள் போட்டுள்ளதாகவும் அந்த கற்கள் கிடக்கின்ற பகுதிகளுக்குள் முதலை வராது என்றும் தெரிவித்த அவர் அந்த மந்திர கற்கள் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.





