இலங்கை Subscribe to இலங்கை
13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் இப்போதைக்கு இல்லை! மாற்றம் செய்யில் இந்தியாவின் ஆலோசனை பெறப்படும்- கெஹலிய ரம்புக்வெல
13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவருதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மட்டு. புத்தர்சிலை விவகாரம், இந்து ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக பிரான்ஸ் தூதுவரிடம் முறைப்பாடு- யோகேஸ்வரன் எம்.பி.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரின் ரொபின்சனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விளக்கிக் கூறியுள்ளார்.
வடக்கில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் வாக்களிக்க முடியாத நிலை- பவ்ரல்
”வட மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடையாள அட்டையில்லாத காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்” என்று பப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
லண்டன் இலங்கைத் தமிழர் சென்னையில் கடத்தல்!
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனக்கு தானே தீமூட்டி கிணற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று வைத்திருந்தவர் கைது
திருமணம் செய்வதற்காக சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எல்லாம் நிறைந்த மாகாண சபையாக கொடுக்கப்பட்ட போது ஆயுதத்தை விடுத்து ஜனநாயகத்திற்கு வந்தவர்- அமைச்சர் ரிசாட் பதியுர்தீன்
ஆயுதம் ஏந்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எல்லாம் நிறைந்த மாகாண சபையாக கொடுக்கப்பட்ட போது ஆயுதத்தை விடுத்து ஜனநாயகத்திற்கு வந்தவர் என்பதனை அனைவரும் சிந்திக்க வேண்டும் என வர்த்தக மற்றுமும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழருக்கான நிரந்தரத் தீர்வு வெகுவிரைவில்; சம்பந்தன் எம்.பி தெரிவிப்பு
தமிழருக்கான நிரந்தரத் தீர்வை சர்வதேச மத்தியஸ்த்துடன் என்றோ ஒரு நாள் இலங்கை அரசு வழங்கியே தீரவேண்டும். அந்த நாள் வெகு தொலைவிலோ இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – சஜித்
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் யார் வெற்றியீட்டினாலும் பிரதேசங்களின் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாh.
ஒரே இரவில் 4 இந்துக் கோயில்கள் மட்டக்களப்பில் விசமிகளால் உடைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.





