தமிழருக்கான நிரந்தரத் தீர்வு வெகுவிரைவில்; சம்பந்தன் எம்.பி தெரிவிப்பு

tamil-news-sampanthan
தமிழருக்கான நிரந்தரத் தீர்வை சர்வதேச மத்தியஸ்த்துடன் என்றோ ஒரு நாள் இலங்கை அரசு வழங்கியே தீரவேண்டும். அந்த நாள் வெகு தொலைவிலோ இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இணைத்து சர்வதேச மத்தியஸ்துடனான நிரந்தர தீர்வையே எதிர்பார்த்து நாம் பயணிக்கின்றோம்.

இதற்காக யாருடனும் பேச்சு நடத்த தயாரகவுள்ளோம். ஆனால் உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒரு போது ஏற்கமாட்டோம்.

இந்நாட்டில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தமிழர் உரிமைக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

இலங்கை அரசு மீது எமக்கு நம்பிக்கை இல்லாத படியால் தான் சர்வதேச மத்தியஸ்த்துடானான நிரந்தர தீர்வை எதிர்பார்த்து நாம் பயணிக்கின்றோம்.இந்த நிரந்தர தீர்வு தமிழர் தாயகமான வடக்கு ,கிழக்கு இணைந்து இருக்கவேண்டும்.

இதற்காக நாம் யாருடனும் பேச்சு நடத்த தயராகவுள்ளோம். ஆனால் உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒரு போதும் நாம் ஏற்கமாட்டோம். இந்த உப்புச்சப்பற்ற தீர்வுகள் எம்மை மீண்டும் அடிமைகளாக்கும்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் மாவட்டத்திற்குள்ளயே தமிழருக்கான தீர்வை முன்வைக்க முயன்றன. இதனால் தான் நாம் தற்போது மிக அவதானத்துடன் செயற்படுகின்றோம்.

தமிழ் மக்களை நாம் ஒரு போதும் நடுத்தெருவில் கைவிடமாட்டோம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சர்வதேச சமூகமும் நன்றாக அறிந்துகொண்டுள்ளது. எனவே சர்வதேச சமூகத்தின் பிடியிலிருந்து இலங்கை அரசு ஒரு போதும் தப்பமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,