இலங்கை Subscribe to இலங்கை
இராவணனுக்கு சிலை அமைக்காது சீதைக்கு கோயில் அமைக்கக் கூடாது – ராவணா பலய
இராவணனுக்கு சிலை அமைக்காது சீதைக்கு கோயில் அமைக்கக் கூடாது என ராவணா பலய தெரிவித்துள்ளது. இந்திய நிதி உதவியின் கீழ் இலங்கையில் சீதைக்கு பாரிய கோயில் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வட மாகாணசபையை மையப்படுத்தி மாகாணசபையில் மாற்றம் கொண்டுவர அரசு முயற்சி
மாகாண சபைகள் ஒன்றிணைக்கப்படுவதற்கு உள்ள வாய்ப்புக்களை தவிர்ப்பது தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைதான மூவரிடமும் விசாரணை தொடர்கிறது! போலி கடனட்டை மூலம் பெறப்பட்ட பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா?
போலி கடனட்டைகள் 15 வைத்திருந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3,956 குடும்பங்கள் வீடுகள் இன்றி புதக்குடியிருப்பில் புதுக்குடியிருப்பில்…
மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் 3,956 பேர் வீடுகள் இன்றி தற்காலிக கொட்டகைகளில் வசித்து வருகின்றனர்.
350 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு! கொழும்பில் பாரிய சூதாட்ட விடுதி
350 மில்லியன் அமெரிக்க டொலர் (3,500 கோடி ரூபா) முதலீட்டில் 400 அறைகள் கொண்ட லாஸ் வெகாஸ் பாணியிலான பெரியதொரு சூதாட்ட விடுதியொன்று கொழும்பு, டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டது.
யார் வேண்டுமானாலும் விருது வழங்கலாமா? கண்ணை மூடி தூங்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்!
வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்துறை சார்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளதுடன் என்ன அடிப்படையில் யாருடைய தெரிவில் அவை வழங்கப்பட்டன எனவும் கேற்வி எழுப்பியுள்ளனர்.
வட-கிழக்கு இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சுரேஸ் பிறேமச்சந்திரன்
பொலிஸ், காணி மற்றும் நிதி அதிகாரங்கள் முழுமையாக கையளிக்கப்பட்டதும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபையாக அமைக்கப்படல் வேண்டுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
முன்னாள் பயங்காரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் சிறையில்!
15 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை யூன் 17 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை நிலத்தை விற்பனை செய்யவுள்ளதால் வெலிக்கடை சிறைச்சாலை கொழும்புக்கு வெளியே செல்கிறது!
வெலிக்கடை சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே பாதுக்கைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடமை செய்யும் பொலிசாருக்கு தாக்குதல் நடத்தினால் உடனடியாக நடவடிக்கை
கடமையை செய்யும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவ்வாறு தாக்குதல்களை நடத்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.





