கடமையை செய்யும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவ்வாறு தாக்குதல்களை நடத்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் பொறுப்புள்ள பொலிஸாரை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப மாகாநாமஹேவா, இது பொலிஸாரின் மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை உடனடியாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை செய்து குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து தாமதமின்றி நீதி கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-