சிறைச்சாலை நிலத்தை விற்பனை செய்யவுள்ளதால் வெலிக்கடை சிறைச்சாலை கொழும்புக்கு வெளியே செல்கிறது!

jail
வெலிக்கடை சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே பாதுக்கைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுக்கையிலுள்ள வட்டரெக்க எனுமிடத்திலேயே புதிய சிறைச்சாலை வளாகத்தை அமைத்துவருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது சிறை அமைந்துள்ள 48 ஏக்கர் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தின் சந்தைபெறுமதி 15 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை அவ்விடத்திலிருந்து மாற்றப்பட்டதும் அந்த இடம் விற்பனைசெய்யப்படும்.அந்த வருமானத்தில், நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளை மறுசீரமைக்கவும் கைதிகளின் நலன்புரி சேவைகளுக்கு பயன்படுத்தவும் முடியுமென்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வெலிக்கடை சிறைச்சாலையானது பிரித்தானிய ஆட்சியாளர்களால் 1841 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,