Tag Archives: கொழும்பு

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் புலிகளின் குண்டுகள்: தேடும் பணி தொடங்கியது
போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிறைச்சாலை நிலத்தை விற்பனை செய்யவுள்ளதால் வெலிக்கடை சிறைச்சாலை கொழும்புக்கு வெளியே செல்கிறது!
வெலிக்கடை சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே பாதுக்கைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் ‘ஜாக் கார்டியர்” நேற்று 22 ஆம் திகதி 53 பிரான்ஸிய கடற்படையினருடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம்: கடற்படை படகு மூழ்கியது?, இருவர் மீட்பு ஒருவரை காணவில்லை
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் படகில் இருந்த இரண்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

நீல அலையில் நவீன மே தினம்
கொழும்பு பொறளை கம்பல் பூங்காவில் கடந்த மே நாளன்று ஒரு பிரமாண்டமான மே தினம். கண்ணைப் பறிக்கும் மின்சார அலங்காரங்கள்.