கைதான மூவரிடமும் விசாரணை தொடர்கிறது! போலி கடனட்டை மூலம் பெறப்பட்ட பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா?

arrestபோலி கடனட்டைகள் 15 வைத்திருந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு, பிறிஸ்டல் வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர்கள் பின்னர் ரகசிய பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மேற்படி போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி மோசடி செய்த பணம் தொடர்பான விபரங்கள் ஆராயப்பட்டு வருவதாக ரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு பெறப்பட்ட பணம், பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பப்பட்டதா எனவும் தாம் ஆராய்ந்து வருவதாக ரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,