முன்னாள் பயங்காரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் சிறையில்!

arrest
15 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை யூன் 17 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறியே குறித்த சந்தேகநபரான ஆனந்த ரணசிங்க 2.6 மில்லியன் ரூபாவை பெற்று பலரை ஏமாற்றியுள்ளதாக கோட்டை மற்றும் கொம்பனிவீதி பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மத்திய வங்கியில் கையிறுப்பிலுள்ள தங்கத்தில் 100 கிலோகிராம் தங்கத்தை பெற்றுதருவதாக பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11 நபர்களில் குறித்த நபர் 6 ஆவது சந்தேகநபராவார்.

அத்துடன், 15 வழக்குகளிலும் குறித்த சந்தேகநபர் முக்கிய சந்தேகநபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சந்தேகநபர் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை தேடிவந்தவர்களில் எட்டுபேரை ஏமாற்றி பணம் பெற்றதாக கோட்டை பொலிஸாரும் மேலும் 7 பேரை ஏமாற்றியதாக கொம்பனிவீதி பொலிஸாரும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,