சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று வைத்திருந்தவர் கைது

wedding
திருமணம் செய்வதற்காக சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மகா அம்பலாங்கொட பிரதேசத்தில் வைத்து குறித்த சந்கேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி சந்தேகநபரினால் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனைகளுக்காக சிறுமி பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைச் சட்டத்தின்படி 16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவர் அவரது விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இன்றியோ திருமணம் செய்து கொள்வது பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சிறுவர் துஸ்பிரயோகமாக கருதி குற்றச் செயலாக பதியப்படும்.

இவ்வாறான குற்றச் செயல் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிக்கு 30 வருடங்கள் வரையில் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,