13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – சஜித்

sajith2
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் யார் வெற்றியீட்டினாலும் பிரதேசங்களின் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாh.

நூட்டின் ஏனைய மாகாண மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் வடக்கு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். எனவே வடக்கில் தேர்தலை நடாத்துவதனை எதிர்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வட மாகாணசபையை நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையானது மக்களின் வரிப் பணத்தை விரயமாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய ஓர் முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். -GTN

Tags: ,