இலங்கை Subscribe to இலங்கை
சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசை விட்டு வெளியேற முடியாது; குருநாகலில் ஹக்கீம் தெரிவிப்பு
சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன.
படையினர் நினைவு முத்திரை யாழில் வற்புறுத்தி விற்பனை; அரச ஊழியர்கள் கடும் விசனம்
“தேசிய போர் வீரர்கள்’ தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வே தமிழரின் தேவை; நாடாளுமன்றில் சம்பந்தன் முழக்கம்
சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
சிறுவனை துஷ்பிரயோம் செய்த பௌத்த பிக்குவுக்கு பிடிவிறாந்து
12 வயது சிறுவனொருவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவர் நீதிமனறத்துக்கு வஐக தராததால் அவர் மீது கம்பஹா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
தாயையும் மகளையும் மணமுடித்த நபருக்கு ஒத்திவைப்புச் சிறை
தாயையும் மகளையும் திருமணம் செய்துகொண்டது, முதல் திருமணத்தை மறைத்து ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்ட சாரதியொருவருக்கு அவிசாவளை நீதிவான் எ.எம்.எம். செனவிரத்ன மூன்று மாதகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
ரோஹன விஜேவீரவின் புதல்வி கைது
ஜே.வி.பி. இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் புதல்வியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாயாரையும் சகோதரரையும் தாக்கிய குற்றத்திற்காக ரோஹன விஜேவீரவின் புதல்வி கைது செய்யப்பட்டுள்ளார்.
நடுங்குகிறது அரசு; வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என அரச ஊழியர்களுக்கு மிரட்டல்
மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அச்சமடைந்துள்ள அரசு, அதை முடக்குவதற்காக அரச சேவையாளர்கள் அனைவரும் இன்று சேவைக்கு கட்டாயமாக சமுகம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அரச பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பிறேமதாச புலிகளைப் பிளவுபடுத்தவே ஆயுதங்களைக் கொடுத்தார்; அவரது மகன் சஜித் பிறேமதாச தெரிவிப்பு
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ ரெஜிமென்ட் மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துவிட்டது: ரணில்
ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யுத்த வெற்றி விழாவில் கடலில் மூழ்கிய கடற்படை வீரர் சடலமாக மீட்பு
கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று முந்தினம் நடைபெற்ற வெற்றி விழாவின் போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.





