
கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று முந்தினம் நடைபெற்ற வெற்றி விழாவின் போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று முந்தினம் நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போனதுடன் இரு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.
படகு விபத்தில் உயிர்தப்பிய இரு கடற்படை வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





