ஜே.வி.பி. இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் புதல்வியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாயாரையும் சகோதரரையும் தாக்கிய குற்றத்திற்காக ரோஹன விஜேவீரவின் புதல்வி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிசர கடற்படை முகாம் வளாகத்திற்குள் அமைந்துள்ள வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ரோஹன விஜேவீரவின் மனைவி மாபாகே காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரான ஏஷா விஜேவீரவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை வத்தளை நீதவான் முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர் செய்தனர்.
சந்தேக நபரை எதிர்வருமு; 3ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். – GTN