இலங்கை Subscribe to இலங்கை
பெண்கள், குழந்தைகளை விற்கும் நாடு இலங்கை – மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்
மனித உயிருக்கான மரியாதை அற்றுப்போயுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்; குழந்தையை வீசி எறிகின்றனர். பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என்று மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்தார்.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் கருத்தடை ஊசி மருந்து குப்பிகள்
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழக்கு கொள்கலனிலிருந்து 30,000 கருத்தடை ஊசி மருந்துக் குப்பிகள் மீட்கப்பட்டன என்று சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
திரைமறைவில் அமெரிக்கா இலங்கைப் படைக்கு பயிற்சி!
சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையில் மறுபுறத்தில் அதன் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் இரண்டாவது குழுவுக்கு,அமெரிக்கா… Read more
இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம்
இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலம் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
ராஜபக்க்ஷ ஆட்சியை விரைவில் கலைப்போம் – ரணில்
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ராஜபக்க்ஷ ஆட்சியை துரத்தும் காலம் நெருங்கி வருகிறது. இவ்வேளை நாட்டில் உள்ள அனைத்து எதிரணியினரும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று மஹிந்த ஆட்சியைத் துரத்த வேண்டும். போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும்… Read more
புலிகளுக்கு புதிய “தலை”
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தலைவர் பிரபாகரனின் பின்னர் புதிய தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் “தினமின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை: கனடா
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடா, இலங்கையிடம் கோரியிருந்தது. எனினும், மனித… Read more
தமிழர் உரிமைப் போராட்டத்தில் கூட்டமைப்பு ஒற்றுமை சிதறாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வெளிவரும் செய்திகளை நேற்று திட்டவட்டமாக பகிரங்கமாக நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
போர் குற்றங்களுக்கு நீதியான தீர்வு கிடைக்காவிட்டால் தமிழர்கள் ஆயுதம் ஏந்துவர்: அமெரிக்கா எச்சரிக்கை!
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இறுதிப் போரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவது தாமதப்படுத்தப்படுமாயின் இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் சிஷன்… Read more
பிரபாகரன் சிறந்த போராளி. போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை! – வசந்த பண்டார
பிரபாகரன் சிறந்த போராளி. போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் கே.பி., தயா, மாஸ்டர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். எனவே தமிழ் மக்கள் ஒரு போதும் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.





