திரைமறைவில் அமெரிக்கா இலங்கைப் படைக்கு பயிற்சி!

usa_srilanka-flag
சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையில் மறுபுறத்தில் அதன் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் இரண்டாவது குழுவுக்கு,அமெரிக்கா இவ்வாறு பயிற்சி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இந்த நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

இதன்போது அமெரிக்க – சிறிலங்கா கடலோரக் காவல்படைகளுக்கு இடையில், பொதுவான கடல்சார் அச்சுறுத்தல்கள், நிபுணத்துவப் பயிற்சியின் முக்கியத்துவம், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது போன்ற கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற பயிற்சிகள் தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படைக் கப்பல்களில் வைத்து, அமெரிக்க கடலோரக் காவல்படையின் நடமாடும் பயிற்சிக் குழுக்களினால் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 15ஆம் திகதி தொடக்கம் ஆரம்பித்த இந்த பயிற்சி நெறி 10 நாட்கள் நடைபெற்றுள்ளது.

இதில் 19 சிறிலங்கா கடலோரக் காவல்படையினரும், 5 சிறிலங்கா கடற்படையினரும் பங்கேற்றுள்ளனர்.

Tags: ,