பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் கருத்தடை ஊசி மருந்து குப்பிகள்

Flag of pakistan
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழக்கு கொள்கலனிலிருந்து 30,000 கருத்தடை ஊசி மருந்துக் குப்பிகள் மீட்கப்பட்டன என்று சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு கொண்டு வந்த மூன்று கொள்கலன்களில் ஒன்றிலிருந்து 15 பொதிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கருத்தடை ஊசி மருந்துக் குப்பிகள் மீட்கப்பட்டன என்று அவர் கூறினார்.

நேற்றுமுன்தினம் அதிகாலை கொள்கலன்களை எடுத்துச் செல்வதற்கு வந்த நபர் குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, குறித்த கொள்கலன்களை சுங்கப் பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மருந்துக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டதுடன், உருளைக்கிழக்கு கொள்கலன்களை அனுப்பிய பாகிஸ்தான் நபரை கைது செய்வதற்கு விமானநிலைய குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags: ,