புலிகளுக்கு புதிய “தலை”

LTTE-Flag
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தலைவர் பிரபாகரனின் பின்னர் புதிய தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் “தினமின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாருடன் இணைந்து இலங்கைப் புலனாய்வுப் பிரிவு இந்தோ னேஷியாவில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என்றும் கூறுகின்றது.

சீலன் என அடையாளப்படுத்தப்படும் இந்தப் புதிய தலைவர், கேபி என்ற குமரன் பத்மநாதனுக்கு அடுத்த நிலையில் ஆயுதக் கடத்தலுக்குப் பொறுப்பாக இருந்தார் என்றும் இவரே இப்போது புலிகள் அமைப்பை வழிநடத்துகிறார் என்றும் அந்தச் செய்தி கூறுகின்றது.

-uthayan

Tags: ,