இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம்

china-srilanka
இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலம் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சீனா வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கை அறிவித்துள்ளது.இலங்கைக் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

சீனாவின் முக்கிய படையதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு கூடுதலான இராணுவ உதவிகளை வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது.

-GTN

Tags: ,