இலங்கை Subscribe to இலங்கை
ராஜபக்க்ஷ குடும்ப ஆதிக்க அநீதி ஆட்சி: அமெரிக்கக் குற்றச்சாட்டு முற்றிலும் சரி – ஐ.தே.க. சாட்டை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி அதிகாரத்தின்கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்குகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது எனத் தெரிவித்து அறிக்கையை வரவேற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.
வடமாகாணத் தேர்தலில் டக்ளஸ் தனித்துப் போட்டி?
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி பெரும்பாலும் தனித்துப் போட்டியிடக் கூடும் என்று கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் முடிந்தாலும் போராட்டம் முடியவில்லை!
கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டன – கோதபாய
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘புதைக்குழிகள் ஒருநாள் வெளிவரும்’ – சுனந்ததேசப்பிரிய
“கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா முள்ளிவாய்க்காலிலா – தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாட்டை களைய வேண்டும்” மாத்தளை மனித படுகொலையின் வெளிப்பாடு – மனித உரிமை கலாசாரத்தை நோக்கி
4ஆம் மாடியில் சுரேசிடம் விசாரணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றத்தடுப்புப் பிரிவினரால் 4 ஆம் மாடியில் வைத்து நேற்று 2 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
ராஜபக்ஷ அரசு வீட்டுக்கு சென்றாலே நாட்டுக்கு விடிவு – தமிழ்க் கூட்டமைப்பு
தமிழ் மக்கள் அனுபவித்த பட்டினிச்சாவை சிங்கள மக்களும் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியிலிருக்கும் மஹிந்த அரச தரப்பினர் வீட்டுக்குச் சென்றால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மனிதஉரிமைகள் மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும்
பிரித்தானியா வெளியிட்டுள்ள, உலகில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், ‘மனிதஉரிமைகளும் ஜனநாயகமும் 2012‘ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மீது மஹிந்த கோபம்; வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாதெனச் சீற்றம்
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது.





