இலங்கை Subscribe to இலங்கை
புலிகள் மீண்டெழவே முடியாதாம் – கூறுகிறது இலங்கைப் படை
‘ முழுமையான இராணுவப் பலத்துடன் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமே இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ்… Read more
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியீடு
இலங்கை மனித உரிமை நிலைமைகள் 2012ம் ஆண்டில் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டில் காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை அத்துடன் கடந்த ஆண்டில்… Read more
முள்ளிவாய்க்கால் முடிவல்ல; திருப்பம் மாணவர்கள் போராட்டம் இதையே உணர்த்துகிறது
முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது ஒரு திருப்பம். மாணவர்களின் உணர்ச்சி மிகு போராட்டம், போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது இவ்வாறு தெரிவித்துள்ளார் கவிஞர் காசி ஆனந்தன்.
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் : சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்திற்க்காக சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உதயன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்; விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்து
உதயன் அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
புலிப் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது
புலிப் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்கிசியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால தன்னாட்சி அதிகாரம் தேவை
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியா ஊடாக, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
உதயன் பிரதான அலுவலகத்தில் விசமிகள் அட்டகாசம்;அச்சு இயந்திரங்களும் எரிப்பு அதிகாலை சம்பவம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் மீது இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். அச்சு இயந்திரம்… Read more
புலிகளின் தலைவர் பிரபாகரன் கடற்புலிகளின் தளபதி சூசை ஆகியோர் தற்கொலை செய்யவில்லை – பொன்சேகா
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கள் இருவரும் போராடியே மரணித்தனர். குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வேண்டாம் அகதி அடையாளம்!
தமிழக அகதி முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 120 ஈழ அகதிகள்கைதாகினர். இலங்கையில் போர் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள்வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்று போலீஸாரிடம் பிடிபட்டு இருக்கிறார்கள்.





