புலிப் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்கிசியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் அரசியலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது என்பதனை உலகிற்கு உணர்த்தும் வகையில் இவ்வாறான தாக்குதல்கள் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத வன்முறைகளின் மூலம் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலை வெற்றிகொள்ளும் இரகசிய திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
-Globaltamilnews





