இலங்கை Subscribe to இலங்கை
இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை?
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா செல்லுவோர் உண்மையான அகதிகள் இல்லை: உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க
அவுஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரச்னையில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை: கோத்தபய ராஜபட்ச
இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் 30 ஆண்டுகள் நீடித்திருக்காது என இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டி உள்ளார்.
போர் குற்ற அறிக்கை பகிரங்கப்படுத்த முடியாது; அமெரிக்காவிற்கு அரசாங்கம் அறிவிப்பு
போர் குற்ற விசாரணை குறித்ததான அறிக்கையினைப் பகிரங்கப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
மிஹின் லங்கா சேவை நிறுத்தப்படும்; தமிழக தாக்குதல்களின் எதிரொலி
திருச்சி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையிலான மிஹின் லங்கா வாராந்த விமான சேவைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போருக்குப் பின் 8,000 அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றம்
இலங்கைப் போருக்குப் பின் சுமார் 8000 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அறிவித்துள்ளது.
இரண்டு மகன்கள் கொல்லப்பட்டதை கோத்தபாயவிடம் கேட்குமாறு ராணுவ அதிகாரி கூறினார் – ஒரு தாயின் அவலம்!
1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் இருந்த ரெஸ்ட் ஹவுஸ் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் மூன்று தினங்களுக்கு பின்னர், தனக்கு காட்டிய பெயர் பட்டியலில், தனது… Read more
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு TNA, அரசாங்கத்திடம் கோரிக்கை
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசு சுயாற்சியுடன் தேவை; இந்தியக் குழுவிடம் தமிழ் மக்கள் கோரிக்கை
இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்காது என்பதால், நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டும் வரைக்கும் சுயாட்சியுடன் கூடிய இடைக்கால மாகாண அரசு ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய எம்.பிக்கள் குழு யாழில்!
இந்தியாவின் எம்.பிக்கள் குழு மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் வருகை தந்த குழுவினரை யாழிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் வே. மகாலிங்கம் வரவேற்றார்.





