
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றத்தடுப்புப் பிரிவினரால் 4 ஆம் மாடியில் வைத்து நேற்று 2 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
“வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என “ரைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணல் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்றன” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஏப்ரல் 12ஆம் திகதி குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனை அழைத்திருந்தனர். இருப்பினும் குறித்த தினத்தில் அவர் அங்கு சென்றிருக்கவில்லை.





