கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமது வயல் நிலங்கள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் கிளர்ச்சி செய்தனர். மணலாறு என அழைக்கப்பட்ட தமிழ்க் கிராமத்தை வெலி ஓயா எனப் பெயர் மாற்றம் செய்த அரசு, அங்கு எண்பதுகளில் சிங்களவர்களைக் குடியேற்றியது. போரால் அவர்கள் வெளியேறி இருந்தனர்.
இப்போது அவர்கள் அரசாலும் இராணுவத்தாலும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கே ஜனாதிபதி நிலங்களை நேற்றுக் கையளித்தார். தமிழர்கள் அதனை எதிர்க்கின்றனர்.
-uthayan