மனிதஉரிமைகள் மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும்

Tamil-news-Sri-Lanka-Flag
பிரித்தானியா வெளியிட்டுள்ள, உலகில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், ‘மனிதஉரிமைகளும் ஜனநாயகமும் 2012‘ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் நாடுகள் என 27 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பெலாரஸ், பர்மா, சீனா, கொலம்பியா, கியூபா, வடகொரியா, கொங்கோ, எரித்ரியா, பிஜி, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஆக்கிரமிப்பு பலஸ்தீனப் பிரதேசங்கள், லிபியா, பாகிஸ்தான், ரஸ்யா, சவுதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சிரியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்னாம், சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகளே மோசமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருந்தாலும் சில விடயங்கள் கவலைக்கிடமானதாகவே உள்ளன.

சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான இழுத்தடிப்பு, வடக்கு கிழக்கில் இராணுவப்பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்ச்சைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்று இன்னமும் நெருக்கடிகள் இலங்கையில் நீடிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-uthayan

Tags: