இந்தியா Subscribe to இந்தியா
றோ அதிகாரி நேற்று யாழில் ரகசியப்பேச்சு; பலாலி உட்பட பல இடங்களுக்கும் அவர் நேரில் பயணம்
இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” வின் உயரதிகாரி ஒருவர் நேற்று யாழ். மாவட்ட படைத் தளபதியை பலாலியில் சந்தித்து ரகசியப்பேச்சு நடத்தியுள்ளார்.
13 ஐ ஒழித்தால் பதிலடி கச்சதீவில்; இலங்கைக்கு கடிவாளம் போடுகிறது இந்தியா
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இலங்கை வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா?: கருணாநிதி சந்தேகம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா? என்பதில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அஜித்துக்குத் தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது: சோ புகழாரம்!
அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளரும் நடிகருமாகிய சோ ராமசாமி பொதுவாக பாராட்டுவதில் மிகவும் கறார் பேர்வழி.
டி. எம். சௌந்தரராஜன் காலமானார்!
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் தனது 91 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
புதுடில்லியில் விரைவில் ஈழத்தவர் ஆதரவு ஆட்சி; இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாண்டியன் உறுதி
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!
திருமணமும் தேர்வும் ஒரே நாளில் வந்துவிட்டதால் திருமணக்கோலத்தில் வந்து பல்கலை தேர்வை எழுதி முடித்த மாணவியை பலர் பாராட்டியுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? : சீமான் கேள்வி
இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடன் பிரச்னையால் குடும்பத்தையே கொன்ற இலங்கை நபர்!
கடன் பிரச்னையால் தனது அம்மா, மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் இன்று மீட்கப்பட்டது. ஆதம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





