மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!

bride
திருமணமும் தேர்வும் ஒரே நாளில் வந்துவிட்டதால் திருமணக்கோலத்தில் வந்து பல்கலை தேர்வை எழுதி முடித்த மாணவியை பலர் பாராட்டியுள்ளனர்.

இந்தியாவின் தமிழகத்திலுள்ள விருதுநகர் அருகே பாலவநத்தத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகள் பாணடீஸ்வரி (வயது 23). இவர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு (எம்.கொம்.) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும் பந்தல்குடியைச் சேர்ந்த தனியார் பஸ் சாரதி பூபதிக்கும் (வயது 26) மே 20ஆம் திகதி திருமணம் முடிக்க, மூன்று மாதங்களுக்கு முன் பேசி முடிக்கப்பட்டது.

அதே திகதியில் காமராஜ் பல்கரை முதுநிலை தேர்வும் அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வு எழுத முடியுமா என பாண்டீஸ்வரி தவித்தார்.

இந்நிலையில் பாண்டீஸ்வரி மணமகள் வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று முன்தினம் காலை திருமணத்தை முடித்துக்கொண்டு மணக்கோலத்தில் கல்லூரிக்கு வந்து தேர்வை எழுதினார் அவரை சக மாணவிகள் பாராட்டினர். தேர்வு முடிந்த பின்னர் மாப்பிள்ளையுடன் திருமண சடங்குகளில் கலந்து கொண்டார்.

Tags: ,