இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.
-GTN