Tag Archives: இந்தியா

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா எந்தக் கோலை பயன்படுத்தியது? தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சாடுகிறார் அரியம் எம்.பி
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கான மந்திரக்கோல் தங்களிடமில்லை என்று கூறும் இந்தியா தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கு எந்தக் கோலை பாவித்திருந்தது? யுத்தத்தினை அழித்தவர்கள் தீர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற… Read more

இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன்: ஐ.தே.க.
அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்து வருவதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான பணத்தையும் கடனாகப் பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவிடப் பார்க்கின்றது.

சீனாவுடனான இலங்கையின் உறவு இந்தியாவுக்கு எதிரானது இல்லை என்கிறார்- பிரசாத் காரியவசம்
இலங்கையின் உறவினராகவும், நெருங்கிய நண்பனாகவும் இந்தியா இருக்கிறது. சீனாவுடன் அதிகரித்து வரும் இலங்கையின் நெருக்கத்துடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சீதைக்கு இலங்கையில் கோவில் கட்டப் போகும் இந்தியா
இலங்கையில் சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில் ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

13 ஐ ஒழித்தால் பதிலடி கச்சதீவில்; இலங்கைக்கு கடிவாளம் போடுகிறது இந்தியா
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இனியும் காதில் பூச்சுற்ற மஹிந்த முயல்வாரா?
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்துவதில் பிரேமதாச பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.

இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபன ஒப்பந்தம் ரத்து
இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பத்து வருடங்கள் பழமையான உடன்படிக்கைகளை இலங்கை தற்போது ரத்து செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம்: சீனா பிடிவாதம்
ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் : சீனா பிடிவாதம் – 4-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர், சுமார்… Read more

சீன ராணுவம் அத்துமீறல் விவகாரம்: இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா முத்தரப்பு பேச்சு
இந்தியா-ஜப்பான் -அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. சீன ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், 3 நாடுகளின் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.