இலங்கையில் சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில் ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியை இலங்கை அரசுவழங்கியுள்ளது எனினும் இந்திய அரசு இதுவரை வழங்கவில்லை,
எனினும் கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணி தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.