List/Grid

Tag Archives: அரசு

LTTE-Flag

புலிகள் புத்துயிர் பெறலாம்; இலங்கை அரசு நம்புவதாக அமெரிக்கா அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக் இலங்கை கருதுகிறது.இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

aayar

தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்க முயன்று கடந்த காலத்திற்கு செல்ல அரசு முயல்கிறது- மன்னார் ஆயர்

தமிழர்களின் இருப்பை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு கடந்த கால வரலாற்றுக்குள் மீண்டும் செல்ல எத்தனிக்கக் கூடாதென்று மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு ஜோசப் ஆண்டகை எச்சரித்துள்ளார்.

govt

வட மாகாணசபையை மையப்படுத்தி மாகாணசபையில் மாற்றம் கொண்டுவர அரசு முயற்சி

மாகாண சபைகள் ஒன்றிணைக்கப்படுவதற்கு உள்ள வாய்ப்புக்களை தவிர்ப்பது தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

amnesty

சுதந்திர பறவைகளாக போர்க் குற்றவாளிகள்; இலங்கை அரசு மீது மன்னிப்புச் சபை சாடல்

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

anura

நாம் அனைவரும் அரசுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோம் : அநுர குமார எம்.பி.

தற்போதையே ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Tamil-news-Sri-Lanka-Flag

நடுங்குகிறது அரசு; வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என அரச ஊழியர்களுக்கு மிரட்டல்

மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அச்சமடைந்துள்ள அரசு, அதை முடக்குவதற்காக அரச சேவையாளர்கள் அனைவரும் இன்று சேவைக்கு கட்டாயமாக சமுகம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அரச பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

unp

வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கி அரசு செல்கின்றது: ஐ.தே.க

நாட்டு மக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் எதிர்ப்பை கண்டு அஞ்சி அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கியே அரசாங்கம் செல்ல முற்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தயா கமஹே… Read more »

LTTE-Flag

முன்னாள் புலிகளையும் களமிறக்கும் அரசு

வடமாகாண சபைத் தேர்தல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாகக் களமிறக்குவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது.

sethu-samudram-project

சேது சமுத்திரத் திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது – தமிழக அரசு

சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என தமிழக மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு ஆராயப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்திய… Read more »

ranil-wickremasinghe

எடிசனும் புலம்பெயர் தமிழருமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்; அரசு இப்படியும் சொல்லும் என்கிறார் ரணில்

“மின்குமிழை உலகுக்கு அறிமுகப்படுத்திய தோமஸ் அல்வா எடிசனும் புலம் பெயர் தமிழர்களுமே மின் கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என அரசு கூறும் காலம் வெகு தொலைவிலில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.