தற்போதையே ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து ஒன்று திரண்டு இறங்கியுள்ளோம் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி.யினால் மின் கட்டண உயர்வை இரத்துச் செய்யுமாறு அரசை வலியுறுத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு எதிராக நாம் அனைவரும் இன்று வீதி ஆர்ப்பாட்டத்திற்கு துணிந்து இறங்கியுள்ளோம்.
நிவாரணம் தருவதாக மக்களுக்கு வாக்குக் கொடுத்த ஜனாதிபதி ராஜபக்ஷ இன்று அதனை நிறைவேற்றவில்லை. இன்று அரசாங்கம் டீசல், பால்மா மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது.
கார் பந்தையங்களை வைப்பது மக்களை சந்தேஷப்படுத்துவதற்காக அல்ல, தனது மகன்மாரை சந்தோசப்படுத்தவே. இந்த மின் கட்டண உயர்வு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் எல்லா செயற்பாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அனைத்து ஊடகங்களும் மக்களுக்கு ஒத்துழைப்பாக செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.