Tag Archives: தேர்தல்
வடமேல் மாகாணசபை கலைக்கப்படும்?
வடமேல் மாகாண சபை எதிர்வரும் 17 ஆம் திகதி கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் இப்போதைக்கு இல்லை! மாற்றம் செய்யில் இந்தியாவின் ஆலோசனை பெறப்படும்- கெஹலிய ரம்புக்வெல
13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவருதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் வாக்களிக்க முடியாத நிலை- பவ்ரல்
”வட மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடையாள அட்டையில்லாத காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்” என்று பப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக குழப்பம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது; மனோகணேசன்
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத வடமாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று நான் நம்பவில்லை. கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதிகளும் மகிந்த அரசாங்கத்தின் சுத்துமாத்தும் ஏமாறப்போகும் இந்தியாவும்
வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த உள்ளதாக இந்தியாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைத்து, இந்தியா மீண்டும் ஏமாற்றுவதற்கு தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி… Read more
தமிழினி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்
விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.
வடக்கில் அரசின் தோல்வி நிச்சயம்
வடக்குத் தேர்தலில் ஏற்படும் படுதோல்வியை மூடிமறைப்பதற்காகவே மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களை வடக்குத் தேர்தலுடன் ஒரேயடியாக நடத்த அரசு முனைப்புக் காட்டிவருகின்றது என்று ஐ.தே.கவின் நாடாளு மன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.





