
வடமேல் மாகாண சபை எதிர்வரும் 17 ஆம் திகதி கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வட மாகாண சபைக்கான தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையிலேயே வடமேல் மாகாண சபை கலைக்கப்படவுள்ளது.
இரண்டு சபைகளுக்குமான தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் நோக்கிலேயே வடமேல் மாகாண சபையை கலைப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மத்திய மாகாண சபை முன்கூட்டியே கலைப்பதா? இன்றேல் இல்லையா? என்பது தொடர்பில் இதுவரையிலும் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-





