வடக்கில் அரசின் தோல்வி நிச்சயம்

vote
வடக்குத் தேர்தலில் ஏற்படும் படுதோல்வியை மூடிமறைப்பதற்காகவே மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களை வடக்குத் தேர்தலுடன் ஒரேயடியாக நடத்த அரசு முனைப்புக் காட்டிவருகின்றது என்று ஐ.தே.கவின் நாடாளு மன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தண்ணீருக்குள் பந்தை அமிழ்த்தி வைப்பதுபோல மக்களை அரசு அடக்கி வைத்துள்ளது. இது இனியும் நீடிக்காது. அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியை மக்களே ஆட்சியில் இருத்துவர்.

இதற்கான அரசியல் பின்னணியும் எமக்கு அதிக மாகவே உள்ளது. எனவே, 2014ஆம் ஆண்டு, அரசுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு:

வடக்குத் தேர்தலை மட்டும் நடத்துவதாகத்தான் ஆரம் பத்தில் அரசு கூறியது. ஆனால், அங்கு ஏற்படப் போகும் படுதோல்வியை மூடி மறைப்பதற்காக மத்திய, வடமேல் மாகாணத் தேர்தல்களையும் வடக்குத் தேர்தலுடன் ஒரேயடியாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும், எந்தத் தேர்தலையும் எதிர் கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம். அதுமட்டு மல்லாது, அடுத்த வருடம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பொதுத் தேர்தலொன்றை நாம் எதிர்பார்க்கிறோம்.

வாழ்க்கைச் சுமையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள் வெகுவிரைவில் அரசுக்கு எதிராக கிளந்தெழுவர். தண்ணீருக்குள் பந்தை அமிழ்த்தி வைப்பது போல நாட்டு மக்களை அரசு அடக்கி வைத்துள்ளது. அவர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வீதிக்கு இறங்கிப் போராட்டம் நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் இருத்துவர்என்றார்.

Tags: ,