
இலங்கையுடன் இருபக்க வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் சந்தித்துப் பேசிய போதே, சீனாவின் உதவி வர்த்தக அமைச்சர் சென்ஜியான் இந்த விருப்பத்தை நேரில் வெளியிட்டுள்ளார்.
சீன உதவி வர்த்தக அமைச்சருடன் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட சீனக் குழுவொன்றும் ஜனாதிபதி மஹிந்தவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
இலங்கை உற்பத்திகள் சீனா வில் வேகமாகப் பிரபலமாகி வருவதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல இலங்கை உற்பத்திப் பொருட்கள் சீனாவில் சந்தைப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக நம்புவதாகவும் சீன உதவி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் பெரியளவிலான திட்டங்களுக்கு மேலதிகமாகச் சிறிய மற்றும் நடுத்தரத் திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கான சீனாவின் விருப்பத்தையும் அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
சீன வர்த்தக அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரைக் கொண்ட இந்தக் குழு, இலங்கை அதிகாரிகளுடன், அடுத்த மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளுக்கான கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தகத் திட்டங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன், அடுத்த மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளுக்கான கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகத் திட்டங்கள் தொடர்பாகச் சீனா பேச்சு நடத்தவுள்ளது.
-uthayan





