List/Grid
Tag Archives: புத்தர் சிலை
மட்டு. புத்தர்சிலை விவகாரம், இந்து ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக பிரான்ஸ் தூதுவரிடம் முறைப்பாடு- யோகேஸ்வரன் எம்.பி.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரின் ரொபின்சனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விளக்கிக் கூறியுள்ளார்.
இது ஒரு பௌத்த நாடு புத்தர் சிலை வைப்பதை யாரும் தடுக்க முடியாது- சுமணரத்தின தேரர்
மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்தார்.
புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்படுவதை கண்டித்தும் இன்று காலை மட்டக்களப்பு, பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது.





