தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐ.நாவுடன் இணக்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை மறுப்பு

un-flag
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கருத்து கேட்டிருந்ததே இதற்கு காரணமாகும்.

எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில், எந்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி கொள்ள மாட்;டோம் என பாதுகாப்புச் செயலாளர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிவில் அமைப்புகளும், இராணுவத்தினர் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகளிடம் முறைப்பாடு செய்துள்ளன. அதேவேளை அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான பெருந்தொகையான காணிகள் வடக்கில் இருப்பதாக யாழ் பிராந்திய இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார். -GTN

Tags: ,