திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோல்ட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக, இலங்கையுடன், இந்திய அரசுத்துறை நிறுவனமான என்.ரி.பி.சி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது.
அயல்நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளில், பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ளும் இந்தியாவின் நோக்கத்தின் ஒரு பகுதியே இந்தத் திட்டமாகும்.
மின்சார கொள்முதல் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இரு முக்கியமான உடன்பாடுகளே இந்த மாத இறுதியில் செய்து கொள்ளப்படவுள்ளன. நீண்டகாலம் இழுபறியாக இருந்து வந்த இந்தத் திட்டத்துக்கான உடன்பாடுகள் செய்து கொள்ளப்படுவது தற்போது உறுதியாகி விட்டன என்பதை இந்திய அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்தியா நிர்ணயித்த கூடுதல் விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய இலங்கை அரசு இணங்கியுள்ளதும், அதற்கு இலங்கையில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-Uthayan