
இலங்கையுடன் சில முரண்பாடுகள் காணப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இலங்கையுடன் சில விடயங்களில் முரண்பாடு காணப்பட்ட போதிலும் அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகா அசோக் காந்தா தெரிவிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முரண்பாடுகளை களைந்து அர்த்தமுள்ள வகையில் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியரின் பங்களிப்பு முக்கியமான என அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில்பாதை அமைத்தல், தொலைதொடர்பாடல் முறைமையை வடக்கில் உருவாக்குதல், பலாலி விமான நிலைய புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
-GTN





