இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளனர்

Refugee_India
இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் அய்யனூர் முகாமில் தங்கியுள்ள அகதிகளே இவ்வாறு இந்தியக் குடியுரிமை கோரியுள்ளனர்.

கடந்த இரண்டு தசாப்த காலமாக வாழ்ந்து வருவதாகவும், தொடர்ந்தும் தம்மை அகதிகள் எனக் குறிப்பிடுவதனை விரும்பவில்லை எனவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளில் சிறிய குற்றங்களைச் செய்தாலும், அவர்கள் அகதிகள் என தூற்றப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 23 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் மீண்டும் நாடு திரும்பும் திட்டம் கிடையாது எனவும் அகதியொருவர் குறிப்பிட்டள்ளார்.

அகதி என்ற முத்திரை குத்தப்பட்ட காரணத்தினால் தாம் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தமக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

-GTN

Tags: , , ,