ஐ.நாவில் விரைவில் தமிழீழக் கொடி; பழ.நெடுமாறன்

LTTE-Flag
191 நாடுகள் உருவான பிறகு தமிழீழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் சிறிது காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் விரைவில் தமிழீழக் கொடி பறப்பதைக் காண்பார்கள் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

சென்னையில் நடை பெற்ற ‘சுதந்திர தமிழீழம் பொதுவாக்கெடுப்பு’ என்ற தலைப்பில் வைகோவின் புத்தகம், ஒளிப்பட குறுந்தட்டு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தும்போதே பழ.நொடுமாறன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

ஐ.நா சபை அமைக்கப்பட்ட போது 1945 ஆம் ஆண்டு ஐ.நா சபையினை உருவாக்கும் முயற்சியில் 49 நாடுகள் தான் அதில் பங்கெடுத்தன. ஆனால் இன்று 191 நாடுகளுக்கு மேல் ஜ.நா சபையில் அங்கம் வகிக்கின்றன. இவை எல்லாம் ஆகாயத்தில் இருந்து விழுந்த நாடுகள் இல்லை.

இருந்த நாடுகள் இரண்டாகப் பிரிந்து பலவகையாகப் பிரிந்து இத்தனை நாடுகள் உருவாகி ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்றன. இத்தனை நாடுகளின் கொடிகள் ஐ.நா முன்றலில் பறப்பதைப் பாக்கலாம். 191 நாடுகள் உருவான பிறகு தமிழீழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நாவின் முன்றலில் தமிழீழக் கொடிபறப்பதைக் காண்பார்கள் என்றார்.

-Uthayan

Tags: ,